Baahubali 2 1st week box office collection Prabhas-Rana epic has grossed
இந்திய சினிமா மட்டும் இல்லை உலக சினிமாவையே பிரமிக்க வைத்த படம் பாகுபலி 2 என்று சொன்னால் மிகையாகது. இந்த படம் ரிலீஸ் நேரத்தில் பலவிதமான மாற்று கருத்துகள் தமிழ் சினிமா ரசிகர்கள் அதாவது ரசிகர்கள் மக்கள் இல்லை சினிமா ரசிகர்கள் என்று தான் சொல்லணும். அதுவும் ரிலீஸ் நாள் அன்று முதல் காட்சி ரத்து ஆனபோது பலர் இந்த படத்தை கொஞ்சம் சாடினார்கள்.
எப்படி தெரியுமா முதல் பாகம் 18 கோடி இரண்டாம் பாகம் 40 கோடியா?? அதான் பேராசை பெரும் நஷ்டம் என்றனர் அதாவது தமிழ் உரிமம் அடுத்து படம் ரிலீஸ் ஆனதும், எங்கள் படத்தின் வசூலை எட்ட முடியவில்லை என்று ஒரு ரசிகர் கூட்டம் அடுத்து எங்கள் தலைவன் ரெகார்ட் மட்டும் அப்படியே இருக்கு, என்று ஒரு பக்கம் படத்தின் மேல் உள்ள பொறாமை ஒரு பக்கம் சில பல இயக்குனர்கள் இந்த படத்தை விமர்சனம் சமுதாய கருத்து தென்னகத்தை சேர்ந்தவன் இப்படி ஒரு பிரமாண்டம் ஒரு சுயமான கதை எழுதி இயக்கியுள்ளார்.
ஒரு நடிகன் தன் படத்துக்கு சினிமா வாழ்கையை ஐந்து வருடம் தியாகம் செய்து மிக சிறப்பாக நடித்து வெற்றி பெற்றுள்ளது. இந்த அர்ப்பணிப்பை கண்டு அவரை பாராட்ட மனம் இல்லை என்றால் விட்டு விடலாம் அதை விட்டு ஏன் விமர்சனம் செய்யணும்?

தென்னிந்தியாவின் இந்த பிரமாண்ட படைப்பு இதுவரை 860 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுதும் 807 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இதுவரை 53 கோடியை கடந்து சாதனை புரிந்துள்ளது.
இதுவரை வெறும் ஆறு நாளில் எந்த படமும் இந்த வசூலித்ததில்லை. ஏன் ரஜினி விஜய் அஜித் படங்கள் கூட இந்த சாதனையை செய்யவில்லையெனலாம். இந்திய அளவில் இது தான் இவ்வளவு ஒரு பெரிய வசூலை வாரி கொட்டியது பாகுபலி 2 தான் இந்த படம் நிச்சயம் 1200 கோடி வசூல் செய்யும் என்று ஒரு கணிப்பு இருக்கிறது.
