baahamathi trailer in anushka

நடிகர்களில் கமல் எப்படியோ அதுபோல நடிகைகளில் அனுஷ்கா. ஒவ்வொரு படத்திற்கும் உடலை வருத்திக் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொண்டு அற்புதமாக நடிப்பார். 



அதன்படி கடந்த 2009ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் அருந்ததியாகவே வாழ்ந்திருப்பார் அனுஷ்கா. அதில் பேத்தி அருந்ததியை விட பாட்டி அருந்ததியே அதிக ஸ்கோர் செய்திருப்பார்.


இந்நிலையில் பாகுபலிக்கு அடுத்தபடியாக அனுஷ்காவின் நடிப்பிற்கு தீனி போடும் விதமாக அமைந்துள்ள படம் பாகமதி. ஸ்டூடியோ கிரீன் வெளியிடும் இப்படத்தை ஜி.அசோக் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அனுஷ்கா, உன்னி முகுந்தன், ஜெயராம், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

அனுஷ்காவின் பிறந்த நாளன்று பாகமதி படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பின்னர் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகும் பாகமதி வருகிற ஜனவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது.