விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'அயோக்யா' படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த டீசரின் முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை இதுவொரு முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த படத்தில், நடிகர் பார்த்திபன் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை சிறப்பாக செய்துள்ளார்.  குறிப்பாக 'வர்றவன் நீதி நியாயம்ன்னா ஸ்பெல்லிங் என்னன்னு கேட்கணும், என்னைவிட ரொம்ப கேவலமானவனா இருக்கணும் என்ற வசனத்தில் அயோக்கியா படத்தில் இவர் எவ்வளவு பெரிய அயோக்கியனான நடித்துள்ளார் என தெரிகிறது.

அடுத்தது இந்த படத்தின் ஹீரோ விஷால், என்ட்ரி முதல் முடிவு வரை  ஆக்சன் காட்சிகளுக்காக கூடுதல் கவனம் செலுத்தி உள்ளார். டீஸரிலேயே அடிச்சி பறக்க விட்டுள்ளார் விஷால்.

இந்த படத்தின் டீசர் இதோ: