தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. என்ன தான் மிகப்பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும், சினிமாவில் அடி எடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் சூர்யா சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். அதை எல்லாம் கடும் மன உறுதியோடு எதிர்கொண்ட சூர்யா, இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். அதற்கு காரணம் சூர்யாவின் கதை தேர்வு மற்றும் கடின உழைப்பு. 

இதையும் படிங்க: ஊரடங்கிலும் ஓவர் கிளு கிளுப்பு... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு கிக்கேற்றிய கவர்ச்சி நடிகை...!

இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில், வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. அதன் பின்னர்  ‘காதலே நிம்மதி’, ‘பெரியண்ணா’, ‘சந்திப்போமா’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும், 2001ம் ஆண்டு வெளியான ‘பிரண்ட்ஸ்’, ‘நந்தா’  ஆகிய திரைப்படங்கள் சூர்யாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. கெளதம் வாசுதேவ் மேனனின் காக்க காக்க திரைப்படம் அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. சிக்ஸ் பேக் தோற்றத்தில் வலம் வந்து தமிழ் சினிமாவை வாய்பிளக்க வைத்தார். 

இதையும் படிங்க: டாஸ்மாக் திறந்தால் ஆட்சி கனவு அவுட்... எடப்பாடிக்கு ரஜினி எச்சரிக்கை...!

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதையடுத்து தன்னுடைய பேவரைட் இயக்குநர் ஹரியுடன் 6வது முறையாக கூட்டணி அமைத்துள்ள சூர்யா அருவா படத்தில் நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

இந்நிலையில் 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அயன். இந்த படத்தில் "பள பளக்குற பகலா நீ" பாடலில் சூர்யா பல கெட்டப்புகளில் வருவார். அதில் பெண் வேடமிட்டு சூர்யா வரும் சீன் மிகவும் பிரபலம். அந்த படத்தில் சூர்யா போட்டு நடித்திருக்கும் ரெட் கலர் கவுனை ஏற்கனவே ஸ்ரேயா அணிந்து நடிப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.  ரஜினிகாந்த், ஸ்ரேயா நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் ஒரு கூடை சன் லைட் பாடலில் ஸ்ரேயா அதே மாதிரி ரெட் கலர் உடையில் ஆட்டம் போட்டிருப்பார். இந்த இரண்டு படங்களையும் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.