வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் பெப்சி தொழிலாளார்கள் வேலை நிறுத்தத்தை தவிர்க்கப் பாருங்கள் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளார்.

சம்பள உயர்வு போன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் வேலை நிறுத்தத்தால் ஏராளமான படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் ரஜினி நடித்து வரும் காலா, விஜய் நடிக்கும் மெர்சல், உட்பட பல பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழ் திரையுலகமே முடங்கிற்று.

இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, ஒருவரை பற்றி ஒருவர் புகார் செய்வதை விட, ஒரு அறையில் உட்கார்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவெடுங்கள்.

தயவு செய்து இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்கப் பாருங்கள்’ என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.