Asianet News TamilAsianet News Tamil

உலகின் அத்தனை சினிமா ரெகார்டுகளையும் அடித்து துவம்சம் செய்த அவெஞ்சர்ஸ்...

இதுவரை உள்ள பிராந்திய தேசிய, உலக ரெகார்டுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி வசூல் சாதனை புரிந்து வருகிறது நேற்று முன் தினம் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்தின் வசூல்.இப்படம் முதல்  ஒரே நாளில் ரூ.1403 கோடி வரை வசூல் கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.

avengers worldwide collection news
Author
Chennai, First Published Apr 28, 2019, 11:10 AM IST

இதுவரை உள்ள பிராந்திய தேசிய, உலக ரெகார்டுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி வசூல் சாதனை புரிந்து வருகிறது நேற்று முன் தினம் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்தின் வசூல்.இப்படம் முதல்  ஒரே நாளில் ரூ.1403 கோடி வரை வசூல் கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.avengers worldwide collection news

மார்வல் சினிமா உலகத்தின் கதையை மையப்படுத்தி உருவான படம் அவெஞ்சர்ஸ். தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உடன் முடிந்துள்ளது. மார்வல்ஸ் தி அவெஞ்சர்ஸ், அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான், அவெஞ்சர்ஸ் இனிபினிட்டி வார் வரை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. 

இப்படத்தைத் தொடர்ந்து அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்ற படம் உலகம் முழுவதும்24ம் தேதியும் இந்தியாவில் 26ம் தேதியும் ரிலீஸானது. தானோஸ் வில்லனுக்கும் சூப்பர் ஹீரோக்களான அவெஞ்சர்ஸ்க்கும் இடையில், நடக்கும் இறுதி யுத்தம் தான் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம். ஹாலிவுட் படமான இப்படத்திற்கு விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் உட்பட பல நட்சத்திரங்கள்  டப்பிங் பேசியிருந்தனர்.avengers worldwide collection news

என்னதான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் திருட்டுத்தனமாக வெளியானாலும், படத்தின் வசூலுக்கு மட்டும் பஞ்சமில்லை. நேற்று உலகம் முழுவதும் ரூ.1403 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பிரபல ஆங்கில பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து வரும் வார இறுதிக்குள் 3 ஆயிரம் கோடி வரை வசூல் குவிக்கும் என்றும் மொத்தமாக, 7 ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த பிரமிப்பான வசூலால் அனைத்து மாநிலங்களிலும் வெளியான உள்ளூர்ப் படங்கள் மந்தமான வசூலைச் சந்தித்து கண்ணீர் சிந்தி வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios