Australian model death in car fire

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ப்ரீ கெல்லர். இவர் அண்மையில் 1 கோடி மதிப்புள்ள நிஸான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார்.

இந்த காரில் தனது சகோதரர் ஸ்டீவ் மற்றும் சில நண்பர்களுடன் ஜாலியாக லாங் டிரைவ் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி விபத்திற்குள்ளாகி லேசாக புகை வர தொடங்கியது. இந்த விபத்து குறித்து உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் முதலில் ப்ரீயின் நண்பர் ஜோசப் பகாலா என்பவரை வெளியில் எடுத்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினார்.

அப்போது திடீர் என கார் தீப்பிடித்து முழுவதும் எரிய தொடங்கியது. இதில் காரில் இருந்த ப்ரீ மற்றும் அவரின் சகோதரர்கள் உடல் கருகி பலியாகினர்.