நடிகை ஆண்ட்ரியா தமிழில் பாடகியாகவும் நடிகையாகவும் வலம் வருகிறார். கோவா படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இவர் பாடிய பாடல் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

தற்போது இவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாளிகை இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்தது ஏனென்றால் இந்த படத்தில் ஆண்ட்ரியா ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா  அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் முகப்புத்தகத்தில் வெளியிடுவார். 

எப்பொழுதும் படு கவர்ச்சியாக தான் போட்டோ சூட் நடத்தும் ஆண்ட்ரியா, தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தனது சிறு வயது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.