லிப்லாக் காட்சியில் நடிகை அபர்ணதி..? ஜெயில் படத்தில் இப்படி ஒரு சீன் உள்ளதாம்..

நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் ஜெயில். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதை கஞ்சா விற்கும் தொழிலை பற்றியும், அதனால் ஏற்படும் சண்டை சச்சரவுகள் என இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்து உள்ளது.

இது ஒருபக்கமிருக்க ஜிவி பிரகாஷ் ஜோடியாக நம்ம வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பிரபலமடைந்த அபர்ணதி கதாநாயகியாக  இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வசந்த பாலன் இயக்க, இந்த படம் குறித்து பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தில் லிப்லாக் முத்தக்காட்கி இடம் பெற்று உள்ளதாக  வெளிவந்த தகவலை அடுத்து இது குறித்து அபர்ணதியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நீங்கள் நினைப்பது போல அந்த காட்சி மோசமானதாக இருக்காது என தெரிவித்து உள்ளார்.