Atlee who runs Vijay wants to run this to him

விஜய்யின் 61--வது படத்தை அட்லீ தற்போது இயக்கி வருகிறார். படக்குழுவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

அங்கு விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளும், பாடலும் படமாக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருக்கும் 150-வது படமான “நிபுணன்” டீஸர் 150 பிரபலங்கள் வெளியிட நேற்று 1.50 மணியளவில் வெளியானது.

இப்படத்தின் டீஸரை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அட்லீ, அதில், “அர்ஜுன் சார் உங்களை இயக்க வேண்டும்” என்பது எனது கனவு என குறிப்பிட்டுள்ளார்.