தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தை பரபரப்பாக இயங்கி வரும் அட்லி, இன்று மனைவி பிரியாவுடன் அத்தி வரதரை வழிபட்டுள்ளார்.

காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் இன்றுடன் முடிவடைவதற்கு ஒட்டி, இன்று ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்துள்ளனர். மேலும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், என பலரும் 40 ஆண்டுகளுக்கு பின் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்துள்ள அத்தி வரதரை காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த பதில் நேற்றைய முன் தினம் கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் வந்து அத்தி வரதரை வழிபட்டார். அவரை தொடர்ந்து நடிகை நயன்தாரா, பிக்பாஸ் நடிகைகள் ஜனனி ஐயர், ரித்விகா, ஆகியோர் அத்தி வரதரை வழிபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை, இயக்குனர் அட்லி தன்னுடைய மனைவி பிரியா உடன் சென்று அத்தி வரதரை தரிசித்து உள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலை தளத்தில் வெளியாகி உள்ளது. திரை படத்தில் பிஸியாக இருந்தாலும் இயக்குனர் அட்லி அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.