இயக்குனர் அட்லீ ட்விட்டர் பக்கத்தில் நண்பரின் மகளுக்கு மருத்துவ உதவி கேட்டு கவலையோடு ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளார். தயவு செய்து உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

'சர்கார்' படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் அட்லி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சூட்டிங்கை தொடங்கி தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

விஜய் – அட்லி கூட்டணியில் உருவான 'தெறி' மற்றும் 'மெர்சல்' மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. அதிலும் கடந்த ஆண்டு வெளியான 'மெர்சல்' திரைப்படம் பல்வேறு சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகள் பலவற்றை படைத்தது வருகிறது. விஜய் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் மெர்சல் படைத்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அடுத்த படம் குறித்து அதிகமாக பேசாமல் அமைதி காத்து வரும் அட்லீ, தற்போது அவரின் கல்லூரி  நட்பு வட்டாரத்தை சேர்ந்த ஒருவரின் 6 வயது மகள் ஜெருஷா என்பவரின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு, ரூ.25 லட்சம் தேவை படுவதாகவும், உதவி செய்ய நினைப்பவர்கள் தயவு செய்து உதவுங்கள் என ட்விட் போட்டுள்ளார்.