atlee sangili pungili kathavathora

அறிமுக இயக்குனர் ஐக், இயக்கத்தில் ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா நடித்து நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. இந்த திரைப்படத்தை 'ராஜா ராணி', 'தெறி' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அட்லீ தயாரித்திருந்தார். 

காமெடி மற்றும் திரில்லர் கலந்து, வெளியாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் முதல் நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ 1.87 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இதில் சென்னையில் மட்டும் ரூ 20 லட்சம், படத்திற்கு நல்ல பாசிட்டிவ் டாக் இருப்பதால் விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஹிட் படங்கள் கொடுக்க பல நாளாக போராடி வந்த ஜீவாவுக்கு இப்படம் மூலம் வெற்றி கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.