இயக்குனர் அட்லீ தற்போது மூன்றாவது முறையாக தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டு வீரராகவும், தாதாவாகவும், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் 20  - 20 கிரிக்கெட் போட்டியின் போது,  இயக்குனர் அட்லி நடிகர் ஷாருகானுடன் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று பேசினார்.

இதனால் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பார் என அரசல் புரசலாக தகவல் வெளியானது.  இந்நிலையில் இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், அட்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக ஒரு கதையை எழுதி இருந்ததாகவும், இதனை ரஜினிடம் ஏற்கனவே சொல்லி அவரின் பதிலுக்காக காத்திருந்தும், அவர் எதுவும் சொல்லாததால்,  இந்த கதையை நடிகர் ஷாருக்கானிடம் கூறி சம்மதம் வாங்கிவிட்டாராம்.

திடீர் என தன்னுடைய முடிவை மாற்றிய அட்லீ, இந்த படத்தை தமிழ் இந்தி என இரு மொழிகளில், இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.