atlee issue in shooting spot
'ராஜா ராணி' படத்தில், இயக்குனராக அறிமுகம் கொடுத்த அட்லீக்கு தொடர்ந்து ஏறுமுகம் என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு அவருடைய புகழ் மேலோங்கி உள்ளது.
தற்போது இரண்டாவது முறையாக விஜயை வைத்து படம் இயங்கிக்கொண்டிருக்கும் அட்லீ, இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது வெளிநாட்டிற்காக சென்றிருக்கிறார்.
அதனால், குறிப்பிட்ட கலைஞர்களை மட்டுமே அழைத்து சென்றுள்ள அட்லீ, கூடவே தன்னுடைய மனைவியையும் அழைத்து சென்று மிகவும் சொகுசான ஹோட்டலில் தங்கி ஊர் சுற்றி காட்டி கொண்டு இருக்கிறாராம்.
தற்போது, அட்லீ செலவு செய்யும் அனைத்து செலவுகளும் தயாரிப்பாளருடைய பட்ஜெட்டில் தான் அடங்கும் என்பதால், தயாரிப்பாளர் அட்லீ மீது செம கடுப்பில் உள்ளாராம். இது குறித்து அவர்களுக்குள் சிறு வாக்குவாதமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
