விஜய் நடித்த பிகில் படம் நெகட்டிவ் விமர்சனங்களால் அவரது ரசிகர்களை திகிலில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் படத்தை மோசமாக இயக்கியதாக அட்லியை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடுமையாக அர்ச்சித்து வருகிறார்கள். 

விஜய் ரசிகர்கள் இதுகுறித்து சமூகவலைதளங்களில் ‘என்னது தெறியை விட மொக்கையா? நான் இன்னும் தெறி படத்தையே பார்க்கலயேடா.. ராயப்பன் கேரக்டரை பார்க்கும் போதே எனக்கு சிறியதாக சந்தேகம் வந்தது. எங்கள் தளபதிய என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் அட்லீ. சுறா, புலி, பைரவா படங்களை எல்லாம் மறக்கிற அளவுக்கு அளவுக்கு பிகிலை எடுத்து வைத்திருக்கிறீர்களே’’ என கடுமையாக விமர்சித்துள்ளனர். 

அடுத்து விஜயின் தீவிர ரசிகர் ஒருவர், ’’செத்து விடலாம் போல இருக்கு. அட்லீ இனிமேல் தளபதி வீட்டு பக்கம் போய்விடாதீர்கள். கதை இருக்கு அது இருக்கு என வந்தால் இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். விஜய் உனக்கு என்ன பாவம் செய்தார். இப்படி படம் எடுத்து வைத்திருக்கிறீர்கள். கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாக இருக்கும்  என எல்லோரும் எப்படி எல்லாம் கற்பனை செய்து கொண்டு போனோம். எல்லாம் நாசமாக போய் விட்டது’’ என்று கோபப்பட்டுள்ளனர்.  

 

இன்னொரு ரசிகரோ, ’’அட்லீ, அண்ணன் விஜய்க்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் தயவு செய்து இனி அவருடன் சேர்ந்து படம் செய்யாதீர்கள். விஜய்  அண்ணா தயவு செய்து இன்னொரு படம் வேண்டாம்.  அஜித் மீது இயக்குநர் சிவா வைத்திருந்த உண்மையான விஸ்வாசத்துக்கும், விஜய் மேல் அட்லீ வைத்திருக்கிற போலியான பாசத்துக்கும் வித்தியாசம் இருக்கு’’என பதிவிட்டு வருகின்றனர்.