atlee get half salary for mersal movie

இயக்குனர் அட்லீ தன்னுடைய முதல் படமான 'ராஜா ராணியிலேயே' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அளவிற்கு படத்தை எடுத்தவர். அவர் இயக்கம் படங்களில் மற்ற படங்களின் சாயல் இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும்... மாஸ் ஹிட் படங்களாக அமைந்து விடுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இந்நிலையில் இவர் இரண்டாவது முறையாக விஜயை வைத்து இயக்கி தற்போது வரை ஒரு சில திரையரங்கங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல்.
இந்த படம் வெளியாவதில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் அத்தனையையும் ப்ரோமோஷன் ஆக்கி தயாரிப்பளருக்கும் விநியோகிச்தர்களுகும் நல்ல லாபத்தை பெற்று தந்துள்ளது.

ஆனால் இப்படி ஒரு படத்தை இயக்கிய அட்லீக்கு தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பில்ம்ஸ் இன்னும் பாதி சம்பளம் அதாவது 5.5 கோடி சம்பளம் கொடுக்காமல் இழுக்கடித்து வருகின்றனராம்.


இதற்கு காரணம் படம் கடைசி நிமிடத்தில் தணிக்கை பெறுவதில் சந்தித்த சிக்கல், போன்றவையால் தயாரிப்பாளருக்கு அட்லீ மீது ஏற்பட்ட கோபம் என கூறப்படுகிறது. இந்த தகவலை அட்லீ விஜயிடம் கூறியுள்ளதாகவும்... விஜய் இது குறித்து தயாரிப்பாளரிடம் பேசுவதாக கூறியுள்ளாராம்.