ஷாருக்கான், நயன்தாரா மற்றும் பிரியா மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் மற்றும் 'ஜவான்' படத்தில் வெளியீட்டு தேதி ஜூன் 2, 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயின் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை வசீகரித்த இயக்குனர் அட்லீ, தற்போது பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா மற்றும் பிரியா மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் வெளியீட்டு தேதி ஜூன் 2, 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கேரியரின் உச்சத்தில் இருக்கும் அனிருத் ரவிச்சந்தர் அட்லீயின் புதிய படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீப காலங்களில் 'டாக்டர்', 'காத்து வாக்குல ரெண்டு காதல்', 'பீஸ்ட்' மற்றும் 'விக்ரம்' ஆகியவற்றுடன் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கியுள்ளார். விரைவில் 'தலைவர் 169' மற்றும் 'ஏகே 62' படங்களுக்கு ஸ்கோர் செய்வார் என அறிவிக்கப்ட்டுள்ளது.

அட்லீ இயக்கும் புதிய ஷாருக்கான் படத்தின் தலைப்பு 'ஜவான்' என ஏற்கனவே நாங்கள் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இதன் டைட்டில் டீசருடன் வெளியாகியுள்ளது. அதில் ஒரு மறைவிடத்தில் ஷாருக் தனது உடைந்த தலையில் கட்டு கட்டுவதும், துணிகளை ஏற்றிய பையுடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வதும் போன்ற மாஸ் காட்சிகளுடன், கேஜிஎப் ஸ்டைலில் துப்பாக்கியை சுழற்றுவது, பழைமையான மேப் உதவியுடன் யாரையோ தேடுவது என 1.30 நிமிட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 <YouTube video player/p>

இது குறித்து அனிருத் ட்விட்டரில், "கனவுகள் நனவாகும்! பாட்ஷாவுக்கே இசையமைத்த எஸ்.ஆர்.கே.. நன்றி மற்றும் என் சகோதரர் அட்லீயைப் பற்றி பெருமைப்படுகிறேன், இது எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்" என்று எழுதியுள்ளார்.

Scroll to load tweet…