பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் என முதல் படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ராஜா, ராணி என்ற படத்தை இயக்கினார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட், கோலிவுட்டின் செல்லப்பிள்ளையாக வலம் வர ஆரம்பித்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்தார். 

 

இதையும் படிங்க: மலை உச்சியில் பிறந்தநாள் கொண்டாட்டம்... சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜனின் அசத்தல் கிளிக்ஸ்...!

இதற்கு முன்பே இயக்குநராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த அட்லீ,  2017ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான “சங்கிலி புங்கிலி கதவ தொற” என்ற படத்தை தயாரித்திருந்தார். மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள அட்லீ, தனது ஏ ஃபார்  ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து  “அந்தகாரம்” என்ற படத்தை தயாரித்துள்ளார்.  இதில் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த, நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.  வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர். விக்னராஜன் என்பவர் இயக்கி உள்ளார். 

 

இதையும் படிங்க: பாலத்தில் அமர்ந்த படி அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்... தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்...!

இந்த படத்தின் டிரைலர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி தாறுமாறு வைரலானது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் கூட டிரெய்லரை பார்த்துவிட்டு அட்லிக்கு வாழ்த்து கூறியிருந்தனர். தற்போது படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் நிறைவடைந்த நிலையில், ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலால் தமிழகத்தில் இதுவரை தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில், நெட்பிலிக்ஸில் அடுத்த மாதம் 24ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.