கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'பட்டதாரி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி மேனன். இந்த படத்தில் இவர் நடித்த போது, கதாநாயகனாக நடித்த நடிகர் அபி சரவணனை காதலித்தார். பின் இருவரும், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்ததாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன் நடிகை அதிதி மேனன், அபி சரவணன் படப்பிடிப்பிற்காக வெளியூருக்கு சென்ற போது, வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து கொண்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது அதிதி மேனன் சென்னை பெருநகர காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அபி சரவணன் தன்னுடைய இமெயில் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தை  ஹேக் செய்து, தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் பேன் கார்டு ஆகியவற்றின் தகவல்களை திருடியதாகவும். தனக்கு பட வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்களுக்கு மிரட்டல் விடுத்தது வருவதாகவும் தெரிவித்தார்".

மேலும் தன்னை திருமணம் செய்துகொண்டதாக போலி சான்றிதழ் தயாரித்து, அபி சரவணன் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் அபி சரவணன் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆனால் அவருடைய பெற்றோர்கள் வந்து மன்னிப்பு கேட்டதால் மன்னித்து அவர் மீது புகார் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த புகாரின் அடைப்படையில் போலீசார் விரைவில் விசாரணை நடத்துவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.