இதில், அதர்வா, அனுபமா பரமேஸ்வரனை நடிக்க வைத்து சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை நடத்திவந்தார் இயக்குநர் ஆர்.கண்ணன்.
இடையில், சந்தானத்தின் புதிய படத்தில் ஆர்.கண்ணன் கவனம் செலுத்தியதால், அதர்வாவின் படம் பாதியில் நின்றது. 

தற்போது, சந்தானத்தின் படத்தை இயக்கி முடித்த கையுடன் அடுத்து அதர்வா படத்தை ஆரம்பித்துள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் நடைபெறுகிறது. 

இதில், அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மலையாளத்தில் 'பிரேமம்' படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தனுஷின் 'கொடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். 

அதன்பின்னர், மலையாளம், தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் அதர்வாவுடன் இணைந்து ரீ எண்ட்ரீ கொடுக்கவுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.