பிரபல நடிகர் முரளியின் மகனும், நடிகருமான அதர்வா விரைவில் நடிகர் விஜயின் உறவினராக ஆக உள்ளதாக ஒரு தகவல் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

நடிகர் அதர்வா, தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.  குறிப்பாக மிகவும் வித்தியாசமான கதைகளையும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் தேர்வு செய்து நடித்து, தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார். இவருக்கு பல பெண் ரசிகர்களும் உள்ளனர்.

நடிகர் என்பதையும் தாண்டி சில படங்களை தயாரிக்கவும் இவர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.  இவருக்கு காவியா என்கிற சகோதரி மற்றும் ஆகாஷ் என்கிற சகோதரர் உள்ளனர். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, அதர்வாவின் சகோதரர் ஆகாஷ், நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பெண் கிறிஸ்டியன் மதத்தை சேர்ந்தவர், ஆகாஷ் இந்து மதத்தை சேர்ந்தவர். இதனால் ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் இருவீட்டாருக்கு இடையே இருந்த நிலையில்,  தற்போது இந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளது.  விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நடிகர் அதர்வா மற்றும் விஜய் இருவரும் நெருங்கிய உறவினர்களாக உள்ளனர் என்கிற ஒரு தகவல் வெளியானாலும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல், இருதரப்பினர் வீட்டிலிருந்தும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.