’சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவதெல்லாம் ஒரு அசிங்கம் பிடித்த வேலை’என்று மிக சர்வசாதாரணமாக அந்த வேலையை இடது கையால் புறந்தள்ளுகிறார் தனது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற பிரபல எழுத்தாளரான பூமணி.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிவரும் ‘அசுரன்’படம் இவர் 37 வருடங்களுக்கு முன் எழுதிய ‘வெக்கை’நாவல்தான் என்பது இன்றைக்கு இலக்கியம் படிக்காத தனுஷ் ரசிகர்கள் வரை பரிச்சயம். இந்நிலையில் ஆங்கில இணையம் ஒன்றுக்கு நீண்ட பேட்டி அளித்துள்ள பூமணி ‘வெக்கை’ நாவல் திரைப்படமாவது குறித்தும் கொஞ்சம் பேசியுள்ளார்.

‘வெக்கை’ நாவலை திரைப்படமாக இயக்கவிரும்புவதாகக் கூறிக்கொண்டு வெற்றிமாறன் என்னைப் பார்க்கவந்தார். அந்த நாவல் திரைப்படமாவது குறித்து எனக்கு மகிழ்ச்சியே’ என்று தெரிவித்திருக்கிறார். ‘98ல் ஏற்கனவே ‘கருவேலம்பூக்கள்’படத்தை இயக்கிய அனுபவம் இருப்பதால் உங்கள் நாவலுக்கான திரைக்கதையை எழுதித்தரும்படி வெற்றிமாறன் கேட்கவில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள பூமணி,” அதிலெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. அது ஒரு அசிங்கம் பிடித்த வேலை’ என்று பதிலளித்திருக்கிறார்.