வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நான்காவது முறையாக நடித்துக்கொண்டிருக்கும் ‘அசுரன்’பட சண்டைக்காட்சி வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதைக் கண்டு தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மலையாள நாயகி மஞ்சு வாரியருடன் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘அசுரன்’படப்பிடிப்பு முடிவுறும் நிலையில் உள்ளது. ‘மயக்கம் என்ன’படத்துக்குப் பின்னர் எட்டுவருட இடைவெளிக்குப் பிறகு  இப்படத்தில் தனுஷுடன் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கைகோர்த்துள்ளார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல், காமெடி நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் 4 வது ஷெட்யூலில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படமாகிக்கொண்டிருக்கும் காட்சியை படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த யாரோ ஒருவர் தனது செல்போனில் சுட்டு இணையதளங்களில் பரப்பியிருக்கிறார்.