astrology says future prime minister is actress aishwarya rai daugther

உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 

தற்போது இந்த தம்பதிகளுக்கு ஆரத்யா என்கிற மகள் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். 

ஜோதிடரின் கணிப்பு:

இந்நிலையில், பரபல ஜோதிடரான கியானேஷ்வர் கடந்த ஆண்டின் புதிய ஜோதிட கணிப்புகளை வெளியிட்டுள்ளார். 

அதில் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யா குறித்தும் இடம் பெற்றுள்ளது. ஆரத்யா குறித்து அவர் கணித்துள்ளது, என்னவென்றால் வரும் காலத்தில் இவர் தன்னுடைய பெயரை ரோகினி என்று மாற்றிக்கொண்டு, இந்தியாவின் வருங்கால பிரதமராக வருவார் என குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கியானேஷ்வர் முந்தய கணிப்புகள்:

இதற்கு முன் கியானேஷ்வர் பிரபல திரைப்பட நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை துல்லியமாக கணித்து கூறியவர்.

அதே போல் 2009 ஆம் ஆண்டு ஆந்திராவில் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் ஏற்றும், அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு 2019 ஆண்டு திருமணம் நடைபெறும் என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் பிரதமராக வருவார் என கணித்து கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.