எவ்வளவு அசிங்கப்பட்டாலும் துடைச்சிக்கிட்டு எங்க போக்குல போய்க்கிட்டே இருப்போம் என்று அத்தனை புகார்களையும் புறந்தள்ளிவிட்டு ‘சர்கார்’ ரிலீஸிலேயே குறியாக இருக்கும் நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கும் சரியான பாடம் புகட்ட உதவி இயக்குநர்கள் சிலர் முடிவெடுத்திருக்கின்றனர்.

‘சர்கார்’ கதை திருட்டுக்கதையே, இதனால் பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் வழங்கிவிட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்று ஒட்டுமொத்த திரையுலகமும் குரல் எழுப்பினாலும் அது தனது காதில் விழாததுபோல், மிக அலட்சியமாக நடந்துவருகிறார் வருங்காலத்தில் தமிழக சர்காரை கைப்பற்ற விரும்பும்  விஜய். இன்னொரு பக்கம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸோ தெனாவட்டின் உச்சக்கட்டமாக, ‘பட ரிலீஸ் பத்தி வீணா வதந்தி பரப்பாதீங்க. என்ன நடந்தாலும் படம் நவம்பர் 6ம் தேதி ரிலீஸ் ஆகியே தீரும்’ என்கிறார்.

கதைத்திருட்டு தொடர்பாக ஏ.ஆர்.முருகதாசும், தயாரிப்பாளரும் வரும் 30ம் தேதி கோர்ட்டில் ஆஜராகி பதிலளிக்கவேண்டும் என்ற உத்தரவையும் மீறி முருகதாஸ், எங்களைத்தாண்டி எதுவும் இல்ல என்பதுபோல்,  பட ரிலீஸ் தொடர்பாக இவ்வளவு ஆணித்தரமாக அறிக்கை விடுவது சினிமாக்காரகளை பெரும் எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது. 

முக்கியமாக, கதையைப் பறிகொடுத்து நியாயம் கிடைக்காமல் தவிக்கும் வருண் ராஜேந்திரனுக்கு உதவி இயக்குநர்களின் ஆதரவு நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. ரிலீஸுக்கு முன் வருண்ராஜேந்திரனை விஜயோ ஏ.ஆர்.முருகதாஸோ சந்தித்து சமரசம் பேசாவிட்டால் அவர்கள் இருவரும் கலந்துகொள்ளும் பத்திரிகையாளர் காட்சியின்போது நூற்றுக்கணக்கான உதவி இயக்குநர்கள் இணைந்து தர்ணா செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம். இந்த செய்தி அறிந்து லைட்டாக அதிர்ந்துபோயிருக்கிறது ‘சர்கார்’ வட்டாரம்