நடுராத்திரியில் ரூமைத் தட்டியவர்கள் இன்று இன்னொரு புதிய இயக்குநர் இணைக்கப்பட்டுள்ளார். ஆனால் சம்பவத்தைச் சொன்ன நடிகை அந்த இயக்குநரது பெயரை இன்னும் வெளியிடவில்லை.
நடுராத்திரியில் ரூமைத் தட்டியவர்கள் இன்று இன்னொரு புதிய இயக்குநர் இணைக்கப்பட்டுள்ளார். ஆனால் சம்பவத்தைச் சொன்ன நடிகை அந்த இயக்குநரது பெயரை இன்னும் வெளியிடவில்லை.
ஸ்ரீதேவிகா ஜெய் ஆகாஷூடன் ‘ராமகிருஷ்ணா’ படத்தில் அறிமுகமான அதன்பின் ‘அந்த நாள் ஞாபகம்’ ‘அன்பே வா’ ஞாகங்கள்’ போன்ற வெகு சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு, ராமச்சந்திரன் என்ற விமான பைலட்டை திருமணம் செய்து சினிமாவை விட்டு டேக் ஆஃப் ஆனார். திருமணம் முடிந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துவந்திருக்கும் அவர் ‘மி டு’ பரபரப்பின்மூலம் தன்னை ஞாபகப்படுத்திக்கொண்டு திரையுலகில் நுழையலாம் என்று நினைத்தாரோ என்னவோ 2006ம் ஆண்டு தனது கதவை நள்ளிரவில் தட்டிய இயக்குநர் குறித்து முகநூலில் பதிந்துள்ளார். 
2006ம் ஆண்டு நான் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் நள்ளிரவில் என் நட்சத்திர ஓட்டல் அறையை ஒருவர் தட்டினார். நான் திறக்கவில்லை. அது அடுத்த மூன்று நாட்களுக்கும் தொடரவே நான் ஓட்டல் ஊழியர்கள் அவர் நான் நடித்துவரும் படத்தின் இயக்குநர்தான் என்பதைத் தெரிந்துகொண்டேன். 
மறுநாள் பட கதாநாயகனிடம் புகார் செய்தபோது, என்னிடம் கோபித்துக்கொண்ட அவர் எனக்குத்தரவேண்டிய சம்பளத்தையும் தராமல் இழுத்தடித்தார். அத்தோடு நில்லாமல் ‘இதைப் பெரிதுபடுத்தினால் உன் வாழ்க்கை நாசமாகிவிடும்’ என்றும் எச்சரித்தார் என்கிறார் ஸ்ரீதேவிகா. இந்த நடுராத்திரி...நட்சத்திர ஓட்டல்...ரூம் அறை தட்டல் வர வர ரொம்ப போரடிக்குதுங்க... அடுத்து என்ன நடந்ததுன்னு சொல்ல ஆரம்பிங்க ப்ளீஸ்..
