தமிழ் சினிமா ரசிகர்களைத் தவிக்கவிட்டுவிட்டு இந்தியில் செட்டிலாகி, அடுத்து தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை மணமுடித்து இந்தி சினிமாவுக்கும் டாட்டா காட்டி முழுநேர குடும்பத்தலைவியாகிவிட்டவர் நடிகை அசின். 

திரையுலகிலிருந்து விடைபெற்ற பின்னர் அசின் தன்னைப்பற்றிய அப்டேட்கள் எதையும் வெளியிடாமல் இருக்கிறாரே என்று ஆதங்கப்படுபவர்களுக்காக அவரது கணவர் ராகுல் சர்மா தங்களது ஒரு வயது குட்டிப்பாப்பா புகைப்படத்தை வெலியிட்டு ஆறுதல் அளித்திருக்கின்றனர். அசின் பெயரைப்போலவே மிகச்சுருக்கமாக குட்டிக்கும் அரின் என்று பெயரிட்டுள்ளனர். 

அரினின் படத்தை ட்விட்டரில் வெளியிட்ட ராகுல் ஷர்மா, ‘ஒரு வருடத்துக்கு முன்பு துறுதுறுவென்ற கண்களுடன் பிறந்த எங்கள் கியூட்டிக்கு இன்று முதலாவது பிறந்தநாள். அடேயப்பா எப்படி வளர்ந்துவிட்டாள் இவள்? காலம் ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிறது’ என்று உற்சாகமாக ட்விட்டியுள்ளார்.

இப்படங்களை அக்‌ஷய் குமார் உடபட இந்தி பிரபலங்கள் ரீட்விட் செய்து வருகின்றனர். இதோ குட்டி அசின் உங்கள் பார்வைக்கு...