asin baby birth

மலையாளத்தில் அறிமுகம் கொடுத்த நடிகையும் மாடலுமான அசின், தமிழில் உள்ளம் கேக்கும் படத்தில் முதலில் நடித்திருந்தாலும், இவர் நடிப்பில் முதலில் வெளிவந்த திரைப்படம் 'எம்.குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி’.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் கஜினி படத்தில் நடித்ததைப் பார்த்துவிட்டு நடிகர் அமீர் கான் இந்தியிலும் இவர்தான் நடிக்க வேண்டும் என பாலிவுட்டிலும் அறிமுகப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து சல்மான் கான் உள்ளிட்ட பலருடன் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தார்.

இவர் உச்சத்தில் இருந்த போதே "மைக்ரோமாக்ஸ்" நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மா என்பவரை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது.

இந்தச் செய்தியை அறிந்த அசின் ரசிகர்கள் பலர் வலைத்தளங்களில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.