ஒரே ஒரு மேடைப்பேச்சு.. ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் குளோஸ்.. தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட Ashwin
என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என்று கூறியது இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களிடம் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது சினிமா வாழ்க்கையை முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என்று கூறியது இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களிடம் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது சினிமா வாழ்க்கையை முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் குக் வித் கோமாளி புகழ் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.
என்ன சொல்ல போகிறாய் இசை வெளியீட்டு விழா கடந்த 6ம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது, ரசிகர்களின் அன்பால் தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்பு தான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன். ஆனால், இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை. என்ன சொல்ல போகிறாய்’ படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையைப் பிரிக்கலாம். விஜய் தொலைக்காட்சி என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்திருக்கிறது. ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தரும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப் படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன்.
மேலும், என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்’ என்றார். அஸ்வினின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையானது. கடந்த 2 நாட்களாக மீம்ஸ், வீடியோ மூலமாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அஸ்வினின் முதல் மேடை பேச்சே சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அவரது சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு சென்றுள்ளது.