அஸ்வின் குமார் (Ashwin Kumar) நடித்துள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ (Enna Solla Pogirai) படத்தை வருகிற டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின் குமார். இந்நிகழ்ச்சி மூலம் புகழ் வெளிச்சத்தை பெற்ற அஸ்வினுக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு இணையாக இவருக்கும் பாலோவர்கள் கிடைத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் அஸ்வினுக்கு பட வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி ‘என்ன சொல்ல போகிறாய்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் அஸ்வின். இதுவரை சமூக வலைதளங்களில் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்த அஸ்வின், கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த என்ன சொல்ல போகிறாய் (Enna Solla Pogirai) படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சால் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். 

கதை கேட்கும் போது கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்றும் அவ்வாறு இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என அவர் பேசியதைக் கேட்டு கோலிவுட்டே கொந்தளித்தது. ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு ஆணவப் பேச்சு தேவையா என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நெட்டிசன்களும் மீம் போட்டு கலாய்த்தனர்.

இவ்வளவு எதிர்ப்பு வரும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத அஸ்வின், பதற்றத்தில் அவ்வாறு பேசிவிட்டதாக மழுப்பலான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தை வருகிற டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. 

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஸ்வினின் பேச்சுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளதால், தற்போது படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என படக்குழு கருதுகிறதாம். இதனால் படத்தை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.