Keerthi Pandian: பிக்பாஸ் மாயாவுடன்... ஸ்டேஜ் பர்ஃபாம்மென்சில் கலக்கும் கீர்த்தி பாண்டியன்! வைரலாகும் வீடியோ..
கீர்த்தி பாண்டியன் பிக்பாஸ் மாயாவுடன், ஸ்டேஜ் பர்ஃபாம்மென்ஸ் செய்த வீடியோ... தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிவரும், மிக முக்கிய போட்டியாளர்களின் ஒருவர் மாயா கிருஷ்ணன். இவர் ஒரு மேடை நாடகங்கள் மூலம் பிரபலமாகி பின்னர் தமிழில் சில படங்களில் நடித்தார். ரஜினிகாந்த் நடித்த 2.ஓ, விக்ரமும் துருவ நட்சத்திரம், கமல்ஹாசனுடன் விக்ரம் போன்ற படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்டதால்... பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ள மாயா... பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபின்னர் ஹீரோயினாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில்... சில போட்டியாளர்கள் பாசிட்டிவ் விமர்சனம் மூலம் ஃபைனல் வரை வந்தாலும் , சிலர் நெகடிவ் விமர்சனம் மூலம் ஃபைனல் வரை வந்துள்ளனர். அந்த வகையில்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகடிவ் பாப்புலாரிட்டியில் பிரபலமானவர் மாயா.
கடந்த வாரம் இவர் வெளியேறுவார் என ரசிகர்கள் பலர் எதிர்பார்த்த நிலையில்... ரவீனா மற்றும் நிக்சன் வெளியேறியது பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதே போல் மாயா பல தவறுகள் செய்த போதும் கூட, கமல் அவரை தட்டி கேட்காமல் இருந்தது, மாயாவுக்கு கமல் சப்போர்ட் செய்கிறாரா என்கிற சந்தேகத்தை தூண்டியது குறிப்பிடத்தக்கது.
எப்படியும் மாயா ஃபைனலுக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாயாவின் ஸ்டேஜ் பர்ஃபாம்மென்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவருடன் பலர் நடித்துள்ளனர். குறிப்பாக பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளும், அசோக் செல்வனின் மனைவியுமான நடிகை கீர்த்தி பாண்டியனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.