தளபதி விஜய்யின் தந்தை, எஸ். ஏ.சந்திரசேகர் கடந்த மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து, இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தளபதி தெரிவித்தார் என்பது நாம் அறிந்ததே.

இந்த அரசியல் கட்சி பற்றிய தகவல் வெளியான போது ஆரவாரம் செய்த ரசிகர்கள், விஜய் தன்னுடைய ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என விஜய் அறிக்கை விட்டதால், ரசிகர்கள் யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நிலையில் எஸ்.ஏ.சி கட்சியின் தலைவர் என அறிவிக்கப்பட்ட பத்மநாபன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இதற்க்கு முன்னரே பொருளாளர் என அறிவிக்கப்பட்ட ஷோபா சந்திரசேகர்  கட்சியிலிருந்து விலகி கணவருக்கு எதிராகவே சில பேட்டிகள் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது எஸ்.ஏ.சி துவங்கியுள்ள அ.இ.த.வி.ம.இ கட்சியின் மாநில தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலா தகராறு தொடர்பாக ராஜாவை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.