arya wish the trisha birthday
கடந்த சில மாதங்களாக, சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட நடிகர் ஆர்யா என்று கூறலாம். காரணம் இவர் திருமணத்திற்கு பெண் தேடுவதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, கடைசி நேரத்தில் இறுதி போட்டியாளராக இருந்த மூன்று பெண்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகினார். 
இதனால் இவரை பல ரசிகர்கள் மிகவும் கடுமையாக விமர்சித்தனர். இப்படி பலரும் திட்டுவதை தாங்க முடியாமல் கடந்த சில நாட்களாக ஆர்யா வெளியில் எங்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆர்யாவின் மிகவும் நெருங்கிய தோழியும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையுமான த்ரிஷா நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். கிட்ட தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் கதாநாயகியாக நடித்து வரும் இவருக்கு பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறினார்.
இந்நிலையில் ஆர்யாவும் சற்று சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் வாழ்த்து கூறியுள்ளார். இதில் இவர் த்ரிஷாவை 'குஞ்சுமணி' என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் இந்த வருடம் உனக்கு மிகவும் சிறப்பான வருடமாக அமைய வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
