நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும்  'காப்பான்' படத்தில்,  நடிகர் ஆர்யா வில்லன் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சிம்பு நடிக்கும் அடுத்த படத்திலும் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கன்னட சூப்பர்  ஸ்டார் சிவ்ராஜ்குமார் மற்றும் ஸ்ரீமுரளி நடித்த 'மஃப்டி' என்ற படம், தற்போது தமிழில் ரீமேக் ஆகவிருப்பதாகவும், இந்த படத்தின் இரண்டு முக்கிய கேரக்டர்களில் சிம்பு மற்றும் ஆர்யா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது சிவராஜ்குமார் வேடத்தில் சிம்புவும், ஸ்ரீமுரளி கேரக்டரில் ஆர்யாவும் நடிப்பது உறுதியானால் சிம்புவுக்கு வில்லனாக ஆர்யா வில்லனாக நடிப்பது உறுதியாகிவிடும்.

மேலும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகர் சரத்குமாரிடம்  பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கன்னடத்தில் 'மஃப்டி' படத்தை இயக்கிய நார்தன், இந்த படத்தையும் இயக்குவார் என்றும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.