நடிகர் ஆர்யா தற்போது பிரபல தொலைக்காட்சி நடத்தி வரும் 'எங்கள் வீட்டு மாப்பிள்ளை' என்கிற நிகழ்ச்சியின் மூலம் திருமணத்திற்காக பெண் தேடிக்கொண்டிருக்கிறார். தினமும் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. 

திருமண பெண்கள்:

ஆர்யாவை திருமணம் செய்ய மொத்தம் 70,000 ஆன்லைன்னில் பதிவு செய்த நிலையில் ஆர்யா மொத்தம் 16 பெண்களை திருமணம் செய்துக் கொள்வதற்காக தேர்வு செய்தார். 

இப்படி தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு தினமும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டு, அவர்களில் வெற்றிப்பெருபவர்கள் ஆர்யாவுடன் தனி தனியாக அல்லது  மூன்று பேர் நான்கு பேர் இணைந்து டேட்டிங் செல்வார்கள்.  

பிரபலங்கள் சந்திப்பு:

மேலும் ஆர்யாவின் நண்பர்களும் இந்த பெண்களை சந்தித்து ஆர்யாவை பற்றி தங்களுக்கு தெரிந்தவற்றை அவர்களிடம் கூறி, எந்த பெண் ஆர்யாவிற்கு ஏற்ற பெண் என கணித்து வருகின்றனர். இது போல் கடந்த வாரம் நடிகை வரலட்சுமி சிறப்பு விருந்தினராக வந்து அனைத்து பெண்களிடமும் ஒரு சில கேள்விகள் மற்றும் எந்த பெண் ஆர்யாவுக்கு ஏற்ற ஜோடி என கூறினார். 

இது போல் தற்போது ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள் ஷாம், பரத் உள்ளிட்ட நடிகர்கள் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ளும் பெண்களை சந்திக்க வந்தனர். 

ப்ரோமோ:

இது குறித்த ஒரு ப்ரோமோ வெளியான போது, நடிகர் ஷாம் ஆர்யா போதை ஊசி பயன்படுத்தக் கூடியவர் என கூறுகிறார். உடனே அங்கிருந்த பெண்கள் அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று அது போல் இருக்காது என கூறுகின்றனர்.

இதற்கு ஷாம் நானே அவருக்கு சிரஞ் செய்துள்ளதாக கூறுகிறார். வேண்டும் என்றால் நீங்களே அவரிடம் கேளுங்கள் என கூறுகிறார். இதை சொன்னதும் ஆர்யாவின் முகம் மாறுகிறது. 

நிஜமாகவே ஆர்யாவிற்க்கு போதை ஊசி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா...? இல்லையா? என இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.