Asianet News TamilAsianet News Tamil

ஆர்யாவை புகழ்ந்து தள்ளிய மாமியார்..! ஏன் தெரியுமா?

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு பற்றியும், மேக்கிங் குறித்த குறித்த வீடியோவும் வெளியானது. இதனை பார்த்து ஆர்யாவின் மாமியார் மாப்பிள்ளையை வேற லெவல் என்றும், தங்களை பெருமை பட வைத்துவிட்டதாகவும் தாறுமாறாக புகழ்ந்துள்ளார்.
 

arya mother in law wishing twit
Author
Chennai, First Published Mar 29, 2021, 3:40 PM IST

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு பற்றியும், மேக்கிங் குறித்த குறித்த வீடியோவும் வெளியானது. இதனை பார்த்து ஆர்யாவின் மாமியார் மாப்பிள்ளையை வேற லெவல் என்றும், தங்களை பெருமை பட வைத்துவிட்டதாகவும் தாறுமாறாக புகழ்ந்துள்ளார்.

arya mother in law wishing twit

ஆர்யாவின் 30வது படமாக உருவாகியுள்ள 'சார்பட்டா' படத்திற்காக மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து, நடித்துள்ளார் ஆர்யா. இவர் மட்டும் இன்றி, இவருடன் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பல்வேறு கடுமையான உடல் பயிற்சிகள் மற்றும் பாக்ஸிங் கற்று கொண்டுதான் நடித்துள்ளனர். இந்த படத்தை 'மெட்ராஸ்', 'காலா', 'கபாலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். கே 9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆர்யா, இப்படத்தில்...  வடசென்னை வாலிபராகவும், பாக்ஸராகவும் நடித்துள்ளார்.

arya mother in law wishing twit

இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்து, விரைவில் டிரைலர் வெளியாக போகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக, 'சார்பட்டா' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு நேற்று  வெளியிட்டது. இந்த வீடியோவில் ஒவ்வொருவருடைய கதாப்பாத்திரம் குறித்தும், படக்குழு விளக்கியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும், எவ்வளவு கடுமையாக படத்திற்காக உழைத்துள்ளனர் என்பதும் தெரிகிறது.

arya mother in law wishing twit

ஏற்கனவே பொங்கல் விருந்தாக பொங்கல் விருந்தாக வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் புதிய போஸ்டரில் சார்பட்டா பரம்பரையை சார்ந்த ரேவ் கண்டெடுத்த வைரமாக கபிலன் (ஆர்யா) அவரை எதிர்த்து இடியாப்ப பரம்பரையை சார்ந்த பாயும் புலி வேம்புலி (ஜான் கொக்கேன்) மோதுவது போல் போஸ்டர் அமைந்தது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் தற்போது வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோவும் ரசிகர்களை கவர்ந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

arya mother in law wishing twit

இந்நிலையில் ஆர்யா இந்த படத்திற்காக எவ்வளவு அர்ப்பணிப்போடு நடித்துள்ளார் என்பதை பார்த்த, ஆர்யாவின் மாமியார் அவரை புகழ்ந்து தள்ளி ட்விட் போட்டுள்ளார். இதில்... ‘அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் உச்சம்தான் நீங்கள் என்றும், நீங்கள் எங்களை பெருமைப்பட வைத்துவிட்டீர்கள் என்றும், வேற லெவலுக்கு சென்றுள்ளீர்கள்’ என்றும் புகழ்ந்துள்ளார். இந்த டுவிட்டுக்கு பதில் அளித்த ஆர்யா ’நன்றி அம்மா’ என்று பதில் கூறி உள்ளார். மேலும் ஆர்யாவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தும் வருகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios