கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் ஆர்யா நடித்த படங்கள் அவருக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஒரு சில படங்கள் சுமாரான வெற்றி படங்களாகவே அமைந்தது. ஆர்யா தற்போது 'கடம்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் முழுக்க முழுக்க பழங்குடியினரை மைய படுத்தி எடுக்கப்படுகிறது.

இந்த படத்திற்காக உடல் எடையை ஏற்றி ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் ஆர்யா.

மேலும் அடுத்ததாக 'பருத்திவீரன்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய அமீர் இயக்கத்தில் ஆர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் ஆர்யா, மொட்டை தலையுடன் நடிக்கவுள்ளதாகவும், இந்த படம் ஆர்யாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்த வெற்றிக்காக மொட்டை அடித்தும் நடிக்க துணித்துள்ளார் .

ஆர்யா, அமீர் இருவருக்குமே திருப்புமுனையை ஏற்படுத்த காத்திருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது