நடிகர் ஆர்யாவுக்கு எப்படியும் இந்த ஆண்டு, அதுவும் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி மூலம் திருமணம் நடந்துவிடும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கும், அவருடைய நண்பர்களுக்கும் மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான். 

ஒரு சில காரணங்களை கூறி இறுதியாக அவரே தேர்வு செய்த மூன்று பெண்களில் ஒருவரைக் கூட திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்பது போல் கூறி நழுவி விட்டார்.

உச்ச கட்ட கோபம்:

ஆர்யாவின் இந்த முடிவால் பலருக்கு இவர் மீது கோவம் தான் ஏற்பட்டது. காரணம் 16 பெண்களை தேர்வு செய்து அவர்களை கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து நன்றாக பழகி வந்த ஆர்யா. வாரம் இரண்டு பெண்களை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும்.

எப்படியும் ஒருவரை தான் திருமணம் செய்ய முடியும் என்பதால் இப்படி ஆர்யா செய்கிறார் என்று பொறுத்துக்கொண்டனர் பலர்.

கேவலமாக நடந்துக்கொண்ட ஆர்யா:

கடைசியாக இந்த நிகழ்ச்சியில் மூன்று பெண்களை ஆர்யாவே தேர்வு செய்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். இப்படி தேர்வு செய்த பெண்களின் மனதில் திருமண ஆசையை தூண்டும் படி, அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று, அவர்கள் மூன்று பேரையும் திருமண மேடை வரை கொண்டு சென்றார்.

திருமணக்கனவு மூன்று பெண்களில் கண்ட ஒரு பெண்ணின் கனவையாவது ஆர்யா நிறைவேற்றுவார் என அனைவரும் எதிர்பார்த்து, அரங்கில் கூடி இருந்தனர்.... நண்பர்கள், உறவினர்கள், பிரபலங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில். 

இந்த மூன்று பெண்களையும் திருமண மேடை வரை அழைத்து அசிங்கப்படுத்துவது போல் தனக்கு சில நாட்கள் நேரம் வேண்டும் என கூறி இந்த மூன்று பெண்கள் முன்னிலையிலும் கேவலமாக நடந்துக்கொண்டார். 

இவரிடம் இருந்து சற்றும் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத மூன்று பெண்களும் நொறுங்கி போனார்கள்.

சுசானாவின் மனநிலை:

இந்த நிகழ்சிக்காக சுசர்லாந்தில் இருந்து கலந்துக்கொண்ட பெண் சுசானா, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்துப் பெற்றவர். இவருடைய வாழ்க்கைய நினைத்து கவலைப்பட்ட பெற்றோருக்கு, இந்த நிகழ்ச்சின் மூலம் சுசானாவிக்கு வாழ்கை அமையும் என நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் தலையில் மிகப்பெரிய கல்லை போட்டது போல் அமைந்தது ஆர்யாவின் வார்த்தை.

சுசானாவின் அப்பா கருத்து:

ஆர்யா தனக்கு சில நாட்கள் அவகாசம் வேண்டும் என கேட்டதை தொடர்ந்து, இவருடைய முடிவு குறித்து அங்கிருந்த அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதற்கு பலர், ஆர்யா மற்றும் அவரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பெண்களின் விருப்பம் என கூறிய நிலையில். இலங்கை பெண் சுசானாவின் தந்தை... தைரியமாக இதை நிகழ்ச்சியாக கொண்டு செல்கிறீர்களா? என மிகவும் கோவமாக கேள்வி எழுப்பினார். இது போன்ற கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ஆர்யா ஒரு நிமிடம் ஆடி போனார். எனினும் பல்வேறு காரணம் கூறி இந்த நிகழ்ச்சியில் இருந்து திருமணம் ஆகாமலேயே இப்போதும் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார் ஆர்யா.