ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடும் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ஏற்ப்படும் மாற்றங்கள் இந்த நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அதே போல் இந்த நிகழ்ச்சிக்கு எதிராகவும் பெண்கள் அமைப்புகளை சேர்ந்த சிலர் தொடர்ந்து தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். எனினும் இந்த நிகழ்ச்சி இளைஞர்கள் பலரால் விரும்பி பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் இரண்டு பெண்கள் எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் நேற்றைய தினம் ஆர்யாவே பெண் ஒருவரை தேர்வு செய்து உனக்கும் எனக்கும் செட் ஆகாது என்பது போல் பேசி இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றி விட்டார்.

மிகவும் நிலையான போட்டியாளராக இருந்து வந்த தேவ சூர்யா என்கிற போட்டியாளர் தான் அவர். 

மூன்று வித்தியாசமான டாஸ்க்குகள் ஆர்யாவிற்கு வைக்கப்பட்டது. அதில் அவர் தேர்வு செய்த மூன்று பெண்களுடன் ஸ்பெஷல் டைம் ஒதிக்கி அவர்களுடன் தனிமையில் பேசினார் ஆர்யா. 

பின் இன்று ஒருவரை தேர்வு செய்து அவருக்கும் ஸ்பெஷல் டைம் ஒதுக்க உள்ளதாக கூறினார். அந்த நபர் தேவ சூர்யா என கூறி, அந்த போட்டியாளருடன் பேசினார்... அப்போது ஆர்யா நான் திருமணம் செய்துக்கொள்வது விவாகரத்து பெறுவதற்கு உள்ள, எனக்கு அப்படி நடக்க கூடாது. நீங்க இந்த நிகழ்ச்சியின் மிகவும் வலிமையான போட்டியாளர். எனினும் உங்களுக்கும் எனக்கும் ஒரு சில விஷயங்கள் ஒத்து வராது என தோன்றுகிறது. 

உங்களை வரிசையாக நிற்க வைத்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதை விட உங்களிடம் இதை நேரடியாக சொல்லவேண்டும் என தோன்றியதாக கூறி இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற கூறினார்.