Arya birthday greetings to be published by First Look Poster

ஆர்யாவின் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் "கஜினிகாந்த்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சர்பிரைஸ் கிஃப்டாக வெளியிட உள்ளதாம் படக்குழு.

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான அடல்ட் காமெடி படம் ‘ஹர ஹர மஹாதேவகி’.

இந்தப் படத்தை உருவாக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இதனையடுத்து இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்றப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் பட்டியலில் இடம் பெறாத நடிகர் ஆர்யா சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ‘கஜினிகாந்த்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதில், ஆர்யாவுக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயிஷா சைகல் நடிக்கிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

தற்போது இந்தப் படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்யாவின் 37-வது பிறந்தநாளை முன்னிட்டு "கஜினிகாந்த்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருக்கிறதாம் படக்குழு.

நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 67-வது பிறந்தநாளை கொண்டாட இருப்பதால் அதற்கு முன்னதாக ஆர்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாம்.