இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி. இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

விஷால் மற்றும் ஆர்யா நிஜத்தில் உயிர் நண்பர்களாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் எதிரிகளாக நடிக்க உள்ளதாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு சமமான கதாபாத்திரத்தில், ஆர்யா வில்லத்தனத்தில் மிரட்டவுள்ளார்.

விஷாலுக்கு ஜோடியாக டிக் டாக் மூலம் பிரபலமாகி, தற்போது பல படங்களில் ஹீரோயினாக கலக்கி வரும், மிருணாளினி நடிக்கிறார்.  முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்துவருகிறார். 

தமன் இசையமைக்கும் இந்த படத்தில்  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் முடிவடைந்து... ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஷால் பெரிய கன் ஒன்றை கையில் பிடித்தபடி, நிற்கும் கருப்பு வெள்ளை போஸ்டர் வெளியாகியுள்ளது அந்த போஸ்டர் இதோ...