கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்,  நடிகர் ஆர்யா, மற்றும் நடிகை சாயிஷா திருமணம் பற்றி தான். இது உண்மையா பொய்யா என தற்போது வரை  பலருக்கும் ஒரு சந்தேகம் இருந்து வருகிறது.

காரணம், காதலிப்பதாக கிசுகிசுக்கப்படும், நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவருமே திருமணம் குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஆனால் இருவருக்கும் நம்பிக்கையான சிலர் இவர்களுடைய காதல் உண்மை தான் என அடித்து கூறுகிறார்கள்.

மேலும் இவர்களுடைய திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்யா பெண் தேடிய 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலருடைய ஆதரவையும் பெற்ற போட்டியாளர்களில் ஒருவரான அபர்நதி, 'ஆர்யா-சாயிஷா திருமண குறித்து பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளது, " 99% இது வதந்தி என்றும் ஆர்யா, சாயிஷா இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இதுகுறித்த செய்தியை வெளியிடாமல் எப்படி இந்த தகவலை நம்ப முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் குறிப்பிட்டது போலவே இன்னும் ஆர்யாவும், சாயிஷாவும் தங்களது திருமணம் குறித்த பதிவு எதையும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாவை விழுந்து விழுந்து காதலித்து அபர்நதி தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார்.