கோலிவுட்டில் ஆர்யாவை பிடிக்காத நாயகிகளே இல்லை, அப்பாடி ஒரு கலகலப்பான நடிகர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்போது முன்னணி நடிகைகள் இடத்தை பிடித்துள்ள நயன்தாரா, அனுஷ்கா என பலரும் இவரின் ஆஸ்தான நண்பர்கள். 

தற்போது ஆர்யா தொடர் தோல்வியின் காரணமாக அவரின் மார்க்கெட்டை பல மடங்கு கீழேசென்று வந்துவிட்டது.

இவருக்கு பின் வந்த சிவகார்த்திகேயன் எல்லாம் தற்போது வேறு லெவலுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இவர் தற்போது கடம்பன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படியே நடித்தால் வேலைக்கு ஆகாது, கொஞ்சம் வில்லனாக நடித்தால் விட்ட மார்க்கெட்டை பிடித்துவிடலாம் என்று எண்ணியுள்ளார்ராம்.

அதற்காக தனது நண்பன் விஷால் படத்தில் வில்லனாக நடிக்கப்போக இப்போது அதுவே அவருக்கு வில்லங்கமாகி , மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இவரை வில்லனாக நடிக்க அழைக்கிறார்களாம்.

ஹீரோவாகவே பாஸ் என்கின்ற பாஸ்கரன், மதுராசப்பட்டிணம், ராஜா ராணி என மெகா ஹிட் படங்களை கொடுத்த ஆர்யாவிற்கு இப்படி நிலைமையா? என அவர் மட்டும் இல்லை ரசிகர்களும் வருத்தத்தில் தான் இருக்கிறார்கள்.