இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது மிரட்டல் தோற்றத்தில் இருக்கும் ஆர்யாவின் லுக் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'சார்பட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது மிரட்டல் தோற்றத்தில் இருக்கும் ஆர்யாவின் லுக் வெளியாகியுள்ளது.
ஆர்யாவின் 30வது படமாக உருவாகும் 'சார்பட்டா' படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்த படத்தை 'மெட்ராஸ்', 'காலா', 'கபாலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். கே 9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆர்யா, இப்படத்தில்... வடசென்னை வாலிபராகவும், பாக்ஸராகவும் நடிக்கிறார் என்கிற செய்திகள் ஏற்கனவே வெளியானது.
இந்த படத்திற்காக ஆர்யா கடின உடல் பயிற்சிகள் செய்து தன்னுடைய உடல் எடையை ஏற்றி, புதிய தோற்றத்திற்கு மாற்றினார். ஒரு ரியல் பாக்ஸர் போலவே இவரது தோற்றம் இருந்தது. இதுகுறித்த சில புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கட்டு கட்டான உடல்கட்டோடு, பார்க்கவே வேற லெவலில் மிரட்டியுள்ளார் ஆர்யா. மேலும் இந்த படத்தில் கலையரசன், சந்தோஷ் பிரதாப், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில், இப்படம் உருவாகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ...
.@K9Studioz proudly presents the First Look of @arya_offl's #SarpattaParambarai 🥊
— pa.ranjith (@beemji) December 2, 2020
A @beemji film
இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா pic.twitter.com/kOsTORQwXQ
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 2, 2020, 12:27 PM IST