வித்தியாசமான தோற்றத்தில் ஆர்யா நடிக்கும்... பான் இந்தியா படம் சைந்தவ்!

தொடர்ந்து வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து நடித்து வரும் ஆர்யா, தற்போது நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் சைந்தவ் என்கிற படத்தில் நடிக்க உள்ளார்.
 

arya acting new pan india movie Saindhav first look released mma

விக்டரி வெங்கடேஷ்-இன் 75-வது படமான சைந்தவ் மிகவும் பிரமாண்ட படைப்பாக உருவாக உள்ளது. ஹிட்வெர்ஸ் புகழ்பெற்ற சைலேஷ் கொலானு இயக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர் வெங்கட் பொயனபள்ளி நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை எட்டு முக்கிய நடிகர்களை சுற்றி நடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏழு கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மற்றொரு மிக முக்கிய கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்ற நடிகராக வலம்வரும் ஆர்யா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தின் பெயர் மனாஸ். மெல்லிய தோற்றம், ஸ்டைலிஷ் லுக்கில் மிஷின் கன்னை கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஆர்யா, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அனைவரையும் கவர்கிறார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பை கேரி பி.ஹெச்., தயாரிப்பு டிசைன் அவினாஷ் கொல்லா, இணை தயாரிப்பாளராக கிஷோர் தல்லூர் இருக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக சைந்தவ் உருவாகி வருகிறது. இந்த படம் அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழிகளில் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்த படம் வெளியாக இருக்கிறது. 

இந்த படத்தில் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா, ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios