arya acting enga veetu mappillai serial
இந்தியின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தொலைகாட்சி தற்போது தமிழிலும் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் தொடங்கப்பட உள்ள இந்த தொலைக்காட்சியின் அறிமுக விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆர்யா கலந்துக்கொண்டார்.
எங்க வீட்டு மாப்பிள்ளை:
இந்த டிவியில் ஒளிப்பரப்பாகும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்கிற தொடரில் ஆர்யா நடிக்கவுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணத்திற்கு பெண் தேவை என்று ஆர்யா வீடியோ வெளியிட்டதுக் கூட இந்த தொடருக்காகத்தானாம்.
நிஜத்தில் திருமணம்:
இது குறித்து ஆர்யா கூறுகையில், 'நான் எங்க வீட்டு மாப்பிள்ளை' என்கிற தொடரில் நடிக்க உள்ளேன். இந்த தொடரில் நடிக்க 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். .jpg)
இவர்களில் ஒருவரை எனக்கு பிடித்தால், அவரையே நிஜத்திலும் திருமணம் செய்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். இந்த தொடர் 40 வாரங்கள் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் ஆர்யாவின் மனம் கவரும் எந்த பெண் யார் என கொஞ்சம் பொறுத்திருந்து பாப்போம்.
