தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அருவி' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு, இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அருவி'.  இந்த படத்தில் அதிதி பாலன் கதாநாயகியாக நடித்திருந்தார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, வசூலையும் வாரி குவித்தது.

மேலும் பிரபல நிகழ்ச்சி ஒன்றை கிண்டல் செய்வது போல் இருந்ததாக சர்ச்சையையும் ஏற்படுத்தியது.  இந்நிலையில் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. 'தங்கல்' படத்தில் நடித்து, பிரபலமான பாத்திமா சனா ஷேக் இந்த படத்தில், அதிதி பாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இ.நிவாஸ் இப்படத்தை இயக்குகிறார். அப்லாஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பேனரின் கீழ் தயாரிக்கப்படும் இப்படத்தை ஃபெய்த் பிலிம்ஸின் விக்கி ரஜனி இணைந்து தயாரிக்கிறார்கள். 

இந்த படக்குழுவின் புகைப்படம் வெளியாக, அருவி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். தென்னிந்திய மொழிகளில் சூப்பர் ஹிட்டாகும் படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுப்பதை தொடர்ந்து, தற்போது பல படங்கள் ரீமேக் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.