அருவி

கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்ட ஒரு படம் என்றால் அது அருவிதான்.அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் தான் அருவி.இந்த படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் தான் அதிதி பாலன்.

பக்கத்து வீட்டு பெண்

பக்கா பக்கத்து வீட்டு பெண் போல் தோற்றம் உள்ள அதிதி பாலன் அருவி படத்தில் அற்புதமாக நடித்திருந்தார்.எய்ட்ஸ் நோயாளிகளின் வலியையும் இந்த சமூகம் அவர்களை எப்படி ஒதுக்குகிறது என்பதையும் இந்த படம் மூலம் இயக்குனர் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

சிறந்த புதுமுக நடிகை

அருவி படத்தில் நேர்த்தியாகவும் மிக எதார்த்தமாகவும் நடித்த அதிதி பாலன் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டார்.மேலும் சமீபத்தில் விகடனின் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

மாடர்ன் லுக்

எந்த விழாவுக்கு சென்றாலும் புடவை உடுத்தி கொண்டு முழுக்க ஹோம்லி லுக்கில் வருவது அதிதியின் வழக்கம். ஆனால் அதற்கு சற்றும் மாறாக பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு படு மாடர்னாக போஸ் கொடுத்துள்ளார் அதிதி.இதை பார்த்த ரசிகர்களோ இது அதிதியா என்று வாயை பிளக்கிறார்கள். அந்த புகைப்படம் இதோ