அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படங்களில் ஒன்று 'அருவம்'. சமீபத்தில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் வெற்றியை தொடர்ந்து சித்தார்த் நடித்துள்ள இந்த படம் வெளியாக உள்ளது. 

திகில், ஆக்ஷன், காமெடி, காதல், என அனைத்து அம்சங்களும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை கேத்தரின் தெரேசா நடித்துள்ளார். இந்த படம் உணவில் பொருள்களில் செக்கப்படும் கலப்படத்தால் ஏற்படும் பாதிப்பு, சுகாதாரம் இல்லாமல் விற்கப்படும் உணவுகளினால் ஏற்படும் கேடுகள் பற்றி எடுக்கப்பட்டுள்ளது.

சாய் சேகர் என்கிற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.  எஸ்.தமன் இணையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை, ட்ரைடென்ட் ஆட்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் சில நிமிட காட்சிகள் இதோ...